நண்பர்கள் அனைவருக்கும் வணக்கம்! இந்த பதிவில், உங்கள் இணையத்தளத்திற்கான விதிமுறைகள் மற்றும் நிபந்தனைகள் பக்கத்தை எவ்வாறு உருவாக்குவது என பார்க்கப்போகிறோம். அதற்கு முன், இணையதளங்களில் விதிமுறைகள் மற்றும் நிபந்தனைகள் பக்கம் என்றால் என்ன ? என பார்ப்போம்

இணையதளங்களில் விதிமுறைகள் மற்றும் நிபந்தனைகள் பக்கம் என்றால் என்ன ?

விதிமுறைகள் மற்றும் நிபந்தனைகள் பக்கம் என்பது உங்கள் வலைத்தளத்தைப் பயன்படுத்த அல்லது அணுக பயனர்கள் ஏற்றுக்கொள்ள வேண்டிய விதிமுறைகள், வழிகாட்டுதல்கள் மற்றும் பிற பயனுள்ள பிரிவுகளை உள்ளடக்கிய ஒரு ஒப்பந்தமாகும்.

மேலும், விதிமுறைகள் மற்றும் நிபந்தனைகள் பக்கம் என்பது உங்கள் இணையதளத்திற்கும், உங்கள் இணையதளத்திற்கு வரும் பார்வையாளர்களுக்கும் இடையே ஒரு தொடர்பை ஏற்படுத்த கூடிய ஒன்றாகும். உங்கள் இணையதளத்தில், அவர்கள் எவற்றையெல்லாம் செய்ய கூடாது என்பன உள்ளிட்டவற்றை அது தெரிவிக்கிறது.

விதிமுறைகள் மற்றும் நிபந்தனைகள் பக்கத்தை உருவாக்குவது எப்படி ?

பெரிய நிறுவனங்கள் அல்லது பொருட்களை வாங்கும் இணையதளங்கள் அல்லது அதிகம் சுய விவரங்களை சேகரிக்கும் இணையதளங்கள் ஆகியவை மட்டுமே தங்களுக்கென தாமே சுயமாக இந்த விதிமுறைகள் மற்றும் நிபந்தனைகள் பக்கத்தை உருவாக்குகின்றன.

அதை தவிர்த்து உள்ள பெரும்பாலான சிறிய இணையதளங்கள் அனைத்துமே நான் இந்த பதிவில் குறிப்பிட்டுள்ளவாறு உருவாக்கிகளை (Generators) வைத்தே அவற்றை உருவாக்கிக் கொள்கின்றன.

Terms & Conditions Generator
Terms & Conditions Generator

எனவே, எளிதாக விதிமுறைகள் மற்றும் நிபந்தனைகள் உருவாக்கும் (Terms & Conditions Generator) இணையதள பக்கம் ஒன்றை உங்களுக்கு இந்த பதிவில் தெரியப்படுத்துகிறேன். இதன் மூலம் நீங்கள் உங்களது இணையத்தின் பெயர் மற்றும் இணையதள முகவரியை கொடுப்பதன் மூலம் எளிதாக விதிமுறைகள் மற்றும் நிபந்தனைகள் பக்கத்தை உருவாக்கி கொள்ளலாம்.
மேலும், இது சில நிமிடங்களில் உங்களுக்கு விதிமுறைகள் மற்றும் நிபந்தனைகளை உருவாக்கி கொடுத்துவிடும் மற்றும் இது பெரும்பாலான பிரிவினை சார்ந்த இணையதளங்களுக்கு பொருந்தும் வண்ணமே இருக்கும்.

விதிமுறைகள் மற்றும் நிபந்தனைகள் பக்கத்தை உருவாக்குவதற்கான எளிய படிகள்

Terms & Conditions Generator Input Details
Terms & Conditions Generator Input Details

Step 1 : முதலில், இந்த பதிவில் குறிப்பிடப்பட்டுள்ள விதிமுறைகள் மற்றும் நிபந்தனைகள் உருவாக்கும் இணையதள பக்கத்திற்கு செல்லுங்கள். (Click Here To Visit)

Step 2 : அதன்பின், அங்குள்ள முதல் பெட்டியில் உங்கள் இணையதளத்தின் பெயரை உள்ளிடுங்கள்.

Step 3 : இரண்டாவது பெட்டியில், உங்கள் இணையதளத்தின் முகவரியை https உடன் உள்ளிடுங்கள்.

Step 4 : இறுதியாக, அங்குள்ள Generate Terms & Conditions என்ற பொத்தானை அழுத்துங்கள்.

Terms & Conditions Generator Output Code Snippet
Terms & Conditions Generator Output Code Snippet

Step 5 : இப்போது, அங்கு மேலுள்ள புகைப்படத்தில் காட்டியுள்ளவாறு Code Snippet ஒன்று உருவாகியிருக்கும். அதிலுள்ளவற்றை அணைத்தையும் அப்படியே நகலெடுத்து (Copy) உங்கள் விதிமுறைகள் மற்றும் நிபந்தனைகள் பக்கத்தில் உள்ளீடு (Paste) செய்து கொள்ளுங்கள்.

Terms & Conditions Generator Output Preview
Terms & Conditions Generator Output Preview

அந்த இணையதள பக்கத்தில், நீங்கள் Generate Terms & Conditions என்ற பொத்தானை அழுத்திய பிறகு தோன்றும் Code Snippet -இன் கீழ், நீங்கள் உள்ளீடு செய்த இணையதள முகவரி மற்றும் இணையதள பெயரின் அடிப்படையில் உங்களது விதிமுறைகள் மற்றும் நிபந்தனைகள் பக்கம் எவ்வாறு இருக்கும் என்பதற்கான முன்னோட்டம் (Preview) அங்கேயே காட்டப்பட்டிருக்கும்.

இந்த பதிவு உங்களுக்கு நிச்சயம் பயனுள்ள வகையில் இருக்கும் என நம்புகிறேன். அவ்வாறு பயனுள்ளதாக இருந்தால், உங்கள் நண்பர்களுக்கும் இதனை பகிருங்கள். அவர்களுக்கு இது பயனுள்ள வகையில் அமையட்டும். இது போன்ற ஒரு நல்ல பதிவில் மீண்டும் உங்களை சந்திக்கிறேன் அதுவரை, கற்றுக்கொண்டே இருங்கள் கற்றுக்கொள்பவர்களிடமிருந்து...!

Previous Post Next Post