நண்பர்கள் அனைவருக்கும் வணக்கம்! இந்த பதிவில், உங்கள் இணையத்தளத்திற்கான தனியுரிமை கொள்கை பக்கத்தை எவ்வாறு உருவாக்குவது என பார்க்கப்போகிறோம். அதற்கு முன், இணையதளங்களில் தனியுரிமைக் கொள்கை பக்கம் என்றால் என்ன ? என பார்ப்போம்

இணையதளங்களில் தனியுரிமைக் கொள்கை பக்கம் என்றால் என்ன ?
தனியுரிமைக் கொள்கை என்பது உங்கள் வலைத்தள பயனர்கள் / பார்வையாளர்களின் தரவை உங்கள் வலைத்தளம் எவ்வாறு சேகரிக்கிறது, கையாளுகிறது மற்றும் செயலாக்குகிறது என்பதைக் குறிக்கும் ஒரு அறிக்கை. நீங்கள் சேகரிக்கும் தகவல்கள் ரகசியமாக வைக்கப்பட்டுள்ளதா, அல்லது மூன்றாம் தரப்பினருடன் பகிர்ந்து கொள்ளப்படுகிறதா அல்லது விற்கப்படுகிறதா என்பதை இது விவரிக்கிறது மற்றும் இது போன்ற கூடுதல் தகவல்களையும் விவரங்களையும் பயனர்கள் / பார்வையாளர்களுக்கு தெரிவிக்கிறது.
தனியுரிமைக் கொள்கை பக்கத்தை உருவாக்குவது எப்படி ?
நான் மேலே குறிப்பிட்டுள்ள படி, தனியுரிமை கொள்கை பக்கம் என்பது உங்கள் இணையதளம் எவ்வாறு செயல்படுகிறது, அது எவ்வாறு உங்கள் இணையத்திற்கு வரும் பார்வையாளர்களின் விவரங்களை சேகரித்து அதனை எவ்வாறு தக்கவைத்துக் கொள்கிறது என்பன உள்ளிட்டவற்றை விளக்குகிறது. இதனை நீங்களே கூட சுயமாக உருவாக்கலாம். ஆனால், அதற்கு உங்களுக்கு இணைய பாதுகாப்பு விதிமுறைகள், சில அத்தியாவசிய விதிமுறைகள் மற்றும் நடைமுறைகள் தெரிந்திருக்க வேண்டும். மேலும், மேற்குறிப்பிட்ட இவற்றை உள்ளடக்கியதாகவே உங்கள் தனியுரிமை கொள்கை இருக்க வேண்டும்.
மேற்கண்ட இவை அனைத்தையும் உள்ளடக்கியதாக உங்கள் தனியுரிமை கொள்கை இருந்தால் தான் கூகுள் அட்சென்ஸ் (Google Adsense) போன்ற விளம்பர நிறுவனங்களின் விளம்பரம் உரிமை உங்கள் இணையதளத்திற்கு கிடைக்கும். எனவே, இது சற்று கடினமாகும். நான் மேற்குறிப்பிட்ட அனைத்து விவரங்களும் உங்கள் அனைவருக்கும் நிச்சயம் தெரிந்திருக்காது.

எனவே, இதனை எளிதாக்க தானியங்கி தனியுரிமை கொள்கை உருவாக்கும் (Privacy Policy Generator) இணையதள பக்கம் ஒன்றை உங்களுக்கு இந்த பதிவில் தெரியப்படுத்துகிறேன். இதன் மூலம் நீங்கள் உங்களது இணையத்தின் பெயர் மற்றும் இணையதள முகவரியை கொடுப்பதன் மூலம் எளிதாக தனியுரிமை கொள்கை பக்கத்தை உருவாக்கி கொள்ளலாம். மேலும், இது சில நிமிடங்களில் உங்களுக்கு தனியுரிமைக் கொள்கையை உருவாக்கி கொடுத்துவிடும் மற்றும் இது பெரும்பாலான பிரிவினை சார்ந்த இணையதளங்களுக்கு பொருந்தும் வண்ணமே இருக்கும்.

Quick Steps
Step 1 : முதலில், இந்த பதிவில் குறிப்பிடப்பட்டுள்ள தனியுரிமை கொள்கை உருவாக்கும் இணையதள பக்கத்திற்கு செல்லுங்கள். (Click Here To Visit)
Step 2 : அதன்பின், அங்குள்ள முதல் பெட்டியில் உங்கள் இணையதளத்தின் பெயரை உள்ளிடுங்கள்.
Step 3 : இரண்டாவது பெட்டியில், உங்கள் இணையதளத்தின் முகவரியை https உடன் உள்ளிடுங்கள்.
Step 4 : இறுதியாக, அங்குள்ள Generate Privacy Policy என்ற பொத்தானை அழுத்துங்கள்.

Step 5 : இப்போது, அங்கு மேலுள்ள புகைப்படத்தில் காட்டியுள்ளவாறு Code Snippet ஒன்று உருவாகியிருக்கும். அதிலுள்ளவற்றை அணைத்தையும் அப்படியே நகலெடுத்து (Copy) உங்கள் தனியுரிமை கொள்கை பக்கத்தில் உள்ளீடு (Paste) செய்து கொள்ளுங்கள்.

அந்த இணையதள பக்கத்தில், நீங்கள் Generate Privacy Policy என்ற பொத்தானை அழுத்திய பிறகு தோன்றும் Code Snippet -இன் கீழ், நீங்கள் உள்ளீடு செய்த இணையதள முகவரி மற்றும் இணையதள பெயரின் அடிப்படையில் உங்களது தனியுரிமைக் கொள்கை எவ்வாறு இருக்கும் என்பதற்கான முன்னோட்டம் (Preview) அங்கேயே காட்டப்பட்டிருக்கும்.
விளக்கக் காணொளி
இந்த பதிவில் கொடுக்கப்பட்டுள்ளவற்றை செய்முறை விளக்கங்களுடன் நமது யூடியூப் சேனலில் உள்ள இந்த காணொளியில் கொடுத்துள்ளேன். காணொளியை பார்த்து விவரங்களை அறிந்து கொள்ளுங்கள்
இந்த பதிவு உங்களுக்கு நிச்சயம் பயனுள்ள வகையில் இருக்கும் என நம்புகிறேன். அவ்வாறு பயனுள்ளதாக இருந்தால், உங்கள் நண்பர்களுக்கும் இதனை பகிருங்கள். அவர்களுக்கு இது பயனுள்ள வகையில் அமையட்டும். இது போன்ற ஒரு நல்ல பதிவில் மீண்டும் உங்களை சந்திக்கிறேன் அதுவரை, கற்றுக்கொண்டே இருங்கள் கற்றுக்கொள்பவர்களிடமிருந்து...!